பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்..’ என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடிக்க, 1981 ஆம் ஆண்டில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தி உமா ரணமன் குரலில் இடம்பெற்ற “ஆனந்த ராகம் கேட்கும் நேரம்” பாடல் இன்றளவும் பலரின் கவத்தை பெற்று வருகிறது.
மூடுபனி, கர்ஜனை என இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களை பாடியுள்ளார். மேலும், எம்.எஸ். விஸ்வநாதன், டி.ராஜேந்தர், தேவா, சிற்பி, வித்யாசாகர், மணி ஷர்மா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்களின் இசையில் உமா ரமணன் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள இல்லத்தில் கணவருடன் உமா ரமணன் வசித்து வந்தார். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.