Skip to main content

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 3.34 லட்சம் பேர் கைதாகி விடுதலை!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகப் பல்வேறு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 
 

tamilnadu curfew police peoples coronavirus lockdown


http://onelink.to/nknapp இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 3,34,549 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,84,861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 3.33 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக இதுவரை 3,16,404 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
kallakurichu issue; The main culprit arrested!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 3 பேர் செயற்கை சுவாச சிகிச்சையிலிருந்து மீண்டு நலம் பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். கண் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்காணிக்கத் தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார். 

kallakurichu issue; The main culprit arrested!

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. மாதேஷிடம் இருந்து மெத்தனால் வாங்கிய சின்னத்துரை அதனை கோவிந்த ராஜுக்கு விற்பனை செய்துள்ளார். அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசஃப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

'பட்டப்பகலில் கள்ளச்சாராய விற்பனை'-ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தொல்.திருமாவளவன் எம்.பி!

Published on 20/06/2024 | Edited on 21/06/2024
'Sale of adulterated liquor in broad daylight'-Vck announced the protest

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 43 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

'Sale of adulterated liquor in broad daylight'-Vck announced the protest

ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரும் 24ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வரும் 24ம் தேதி சென்னையில் விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பலர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப்பகலில் கள்ளச்சாராயம் விற்பனை ஆகிறது. இது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. மெத்தனால் எளிதாக கிடைக்கும் பொருள் அல்ல, ஆனால் கள்ளச் சந்தையில் விற்பனை ஆகிறது' என தெரிவித்துள்ளார்.