Skip to main content

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலி! கி.வீரமணி கண்டனம்!

Published on 22/05/2018 | Edited on 22/05/2018
dead

 

 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. கட்சிகளையெல்லாம் கடந்து மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த உணர்வை மத்திய - மாநில அரசுகள் புரிந்துகொண்டதாகவே தெரிய வில்லை. இன்று (22.5.2018) முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவினை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.
 

tuty

 

 


முன்கூட்டியே மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, சுமுகத் தீர்வு கண்டிருக்க வேண்டாமா தமிழக அரசு?

தடையை மீறிப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருவர் மரணமடைந்தனர். பலரும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரியதும், கண்டிக்கத்தக்கது மாகும்.

மறைந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல். இந்த உயிர்ப் பலிகளால் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம் ஓய்ந்துவிடப் போவ தில்லை - இது மேலும் தீவிரத்தை ஏற்படுத்தத்தான் செய்யும்.

மத்திய - மாநில அரசுகள் மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு, மக்கள் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்