Skip to main content

பள்ளிக்கு வந்த மாணவர்கள்... பூக்கள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள் (படங்கள்) 

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்திருந்த நிலையில், கரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மேற்கூறிய அனைத்து கட்டுப்பாடுகளும் சில நாட்களுக்கு முன்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேபோல், இன்று முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு கைகளில் கிருமி நாசினி போடப்பட்டு, பிறகு பள்ளி வகுப்பறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பல இடங்களில் மாணவர்கள் வெகு நாட்கள் கழித்து பள்ளிக்கு வருவதால் பூக்கள் கொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூல்? - பாமகவினர் திருவோடு ஏந்தி போராட்டம்!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
pmk struggle due to extra fee collection in school

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாணவர்களின் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளியின் நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து  திருவோடு ஏந்தி 50க்கும் மேற்பட்ட பாமகவினர் நூதன  முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

pmk struggle due to extra fee collection in school

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் காந்தி ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Next Story

‘பெற்றோர்கள் வாக்களித்தால் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்’ - பள்ளி நிர்வாகம்

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
school management, if the parents vote, the children will get an additional 10 marks

நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 14 தொகுதிகளுக்கு வரும் 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, பெற்றோர்கள் வாக்களித்தால் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த பள்ளி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளுக்கு மறுநாள்(21.5.2024) அன்று எங்களின் குழுமத்தின் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்கள் கூட்டம் நடைபெறும். அப்போது வாக்களித்த அடையாள மையை காட்டினால், அடுத்து வரும் தேர்தலில் அவர்களின் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், இதர அலுவலர்கள் என யார் வாக்களித்தாலும் அவர்களுக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை அதிகப்படுத்த செயிண்ட் ஜோசப் கல்வி குழுமம் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.