Skip to main content

அஞ்சலக சேமிப்பு கணக்குத் தொடங்க வேண்டும் எனக் கூறி ரூபாய் 48 ஆயிரம் திருட்டு! 

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

Rs 48,000 stolen post office

 

புதுச்சேரி முதலியார்பேட்டை பேருந்து நிலையம் அருகே துணை அஞ்சலகம் செயல்பட்டு வருகின்றது. 

 

இந்நிலையில் நேற்று அஞ்சலகத்திற்கு வந்த 3 நபர்கள் தங்களுக்குச் சேமிப்பு கணக்குத் தொடங்க வேண்டும் எனத் துணை தபால் அதிகாரி லட்சுமி நரசிம்மனிடம் பேசி உள்ளனர். மேலும் அதற்கான விண்ணப்பங்களை கொடுத்தால் தற்போதே, நாங்கள் பூர்த்தி செய்து தந்துவிடுவோம் எனவும் கூறியுள்ளனர். 


அதையடுத்து துணை தபால் அதிகாரி, கணக்குத் தொடங்குவதற்கான படிவங்களை அருகில் உள்ள மேசையில் எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரது மேசையில் வைக்கப்பட்டிருந்த 2,000 ரூபாய் கட்டிலிருந்து, ரூபாய் 48 ஆயிரத்தை அந்த மூன்று நபர்களும் திருடிச் சென்றுள்ளனர். 

 

அஞ்சலகத்திற்குள் நுழைந்து நூதன முறையில் பணத்தை 'அபேஸ்' செய்த சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து லட்சுமி நரசிம்மன் அளித்த புகாரையடுத்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அஞ்சலகத்தில் பணம் திருடியவர்களைத் தேடி வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்