Skip to main content

நீட் கலந்தாய்வில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்! (படங்கள்)

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

 

தருமபுரியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவபிரகாசம். இவர் நீட் தேர்வில் வென்று மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்காக ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரிக்கு வருகை புரிந்துள்ளார். சிவபிரகாசம் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசையில் 249வது இடம்பிடித்துள்ளார்.

 

61 வயதில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர் தன்னிடம் பயின்ற மாணவர் குமாருடன் மருத்துவ கலந்தாய்விற்கு வந்து பங்கேற்றது பலரையும் வியப்படைய செய்துள்ளது. இவரது மகன் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  தற்போது அவரது மகனின் ஆலோசனையின் அடிப்படையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுகொடுத்துள்ளார். இவர் தனது படிப்பை முடித்து பணிக்கு வருவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால் இந்த வாய்ப்பினை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவப்படிப்பு இடத்தை விட்டுக்கொடுத்தார். 

 


 

 

சார்ந்த செய்திகள்