Skip to main content

விரத்தியில் பேசுகிறார் தினகரன்: ஆதாரம் எங்கே? நிர்மலா பெரியசாமி பேட்டி

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
Nirmala Periasamy Interview



2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி அவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தித்தது உண்மை. தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.  பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் 05.10.2018 வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
 

இதற்கு ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முனுசாமி, அதிமுகவினரை குழப்ப வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று கூறினார். அமைச்சர் தங்கமணி, தினகரனை ஒருபோதும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மாட்டார் என்றார். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அதிமுகவின் நிர்மலா பெரியசாமி:-
 

எனக்கு தெரிந்தவரை அமைச்சர் தங்கமணி தான் என்ன பேசுகிறோம் என்று புரிந்து பேசக்கூடியவர். ஆனால் தினகரன் தரப்பில் பரபரப்பை கிளப்புவதற்காக என்னவேண்டுமானாலும் பேசக்கூடியவர்கள். 
 

ஒரு வாரத்தில் கலையும், ஒரு மாதத்தில் கலையும், ஆட்சி இதோ போகப்போகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த தினகரனுக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதால் விரத்தியில் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடப்பதை அவரால் பொறுக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெற்றிக்கரமாக நடந்தது. ஜெயலலிதா இருந்தால் எப்படி தேர்தல் பணிகளை முதலில் ஆரம்பிப்பார்களோ, அதைப்போலவே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் முதல் முறையாக அதிமுக நடத்தியது. 
 

18 எம்எல்ஏக்கள் வழக்கு விரைவில் வரப்போகிறது என்று சொல்கிறார்கள். சட்ட வல்லுநர்கள் சபாநாயகர் தீர்ப்புக்கு மாறாக வராது என்று சொல்லுகிறார்கள். ஒருவேளை அதுசம்மந்தகமாக தினகரனுக்கு தகவல் தெரிந்ததோ என்னவோ தெரியவில்லை. அங்கே உள்ள 18 எம்எல்ஏக்களும் ஒரு புழுக்கத்தில் உள்ளதாக கேள்விப்டுகிறோம். எப்ப வெளியில் விடுவார்கள் என்ற வேகத்தில் இருப்பதாக தெரிகிறது. 
 

இதனால் விரத்தியின் உச்சத்திற்கு சென்ற தினகரன், ஏதாவது ஒரு குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதால் இப்படி பேசுகிறார். ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஒற்றுமையை கலைக்க இப்படி கொளுத்தி போடுகிறார். எதுவாக இருந்தாலும் ஆதாரத்தை வெளியிட்டுவிட்டு பேச வேண்டும். இது தினகரனுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும். 
 

ஏற்கனவே தினகரன் மீது அதிமுக தொண்டர்கள் வெறுப்பில் உள்ளனர். இந்த மாதிரியான அரசியல் செய்தால் நூறு சதவீதம் இல்லை, இருநூறு சதவீதம் தினகரனை புறக்கணிக்கும் மனநிலைக்கு வருவார்கள். 
 

ஓ.பி.எஸ். - தினகரன் சந்தித்தது எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது. அவர்கள் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியிருக்கிறாரே?
 

கனகராஜ் அவரது கருத்தை சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவரும் கருத்து சொல்லலாம். அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் சொல்வதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள முடியும். இவ்வாறு கூறினார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் மனநிலை எப்படி இருக்கும்?; பிரதமர் மோடி பகிர்ந்த ருசிகர தகவல்!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
information shared by Prime Minister Modi on What will the mood be like on the day of the election results

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி ஏபிபி என்ற தனியார் செய்து நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் அன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் நான் கூடுதல் கவனமாக இருப்பேன். தேர்தலில் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை என்ற விவரத்தில் இருந்து நான் தள்ளியே இருப்பேன்.

வாக்குகள் எண்ணும் நாளில், நான் தியானம் செய்வதை அதிகரிப்பேன். பிற தினசரி வேலைகளின் நேரத்தை அதிகரிப்பேன். வாக்கு எண்ணும் நாளில், யாரும் என் அறைக்குள் அனுமதிக்கமாட்டேன். என்னைத் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள யாரையும் அனுமதிக்கமாட்டேன். முடிவு நாளில், வெற்றி உறுதியாகும் வரை நான் விலகியே இருப்பேன். 

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் போது, தேர்தல் ஆணையம் என்னை மிகவும் தொந்தரவு செய்து, எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தது. நான் வெற்றி பெறுவது கடினம் என்று மக்கள் என்னிடம் கூறினார்கள். கடந்த 2001 டிசம்பர் 15ஆம் தேதி அன்று குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. முதல்வர் இல்லத்தில் என் அறையில் அமர்ந்தேன். நான் எந்த அழைப்புகளையும் எடுக்கவில்லை. மதியம் 1.30 மணியளவில், வெளியே டிரம்ஸ் வாசிக்கும் சத்தம் கேட்டது. அதனால் என்ன விஷயம் என்று கேட்க ஒருவரை அழைத்தேன். கட்சித் தொண்டர்கள் என்னை வாழ்த்த விரும்புவதாகக் கடிதம் ஒன்றைக் கொண்டு வந்தார். முடிவுகளின் குறிப்பை நான் முதன்முறையாகப் பெற்றேன். நல்ல மாலையும், இனிப்புப் பெட்டியும் வாங்கி வரச் சொன்னேன். எங்கள் வெற்றியைக் கொண்டாடும் முன் கேசுபாய் படேலுக்கு முதலில் மாலை அணிவித்தேன்” என்று கூறினார். 

Next Story

“நான் மனிதப் பிறவியே இல்லை” - பிரதமர் மோடி 

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
PM Modi he was not born biologically

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சாதாரண மனிதர்களைப் போல நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். 

என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். 


கடந்த 20ஆம் தேதி, ஒடிசா மாநிலம், பூரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரான சம்பித் பத்ரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “கடவுள் ஜெகன்நாதரே பிரதமர் மோடியின் பக்தர்தான்” என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது. அதற்கு ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட எதிர்க்கட்சியினர் அனைவரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தான் மனிதப்பிறவி இல்லை என்றும், கடவுள் தான் தன்னை அனுப்பியிருக்கிறார் என்றும் பிரதமர் மோடி கூறியிருப்பது பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது.