Skip to main content

சின்னத்திரை கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு! (படங்கள்)

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

திமுக மாவட்ட பிரதிநிதியும் கவர்னரின் செயலாளருமான (Lion club Dist 324 A6) D. ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் 03.06.2021 அன்று மாலை 5 மணி அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சார்பாக 1,000 உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியம், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிராபகர் ராஜா ஆகியோர் பங்கேற்று பயனாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

 

இத்தகைய சிறப்புப் பொருந்திய நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அபியும் நானும்’ நெடுந்தொடரில் முகில் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் நிதிஷ், கரோனாவால் அவதியுறும் சிறார்கள் நலனுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது நீண்டநாள் சேமிப்பு தொகையை மாண்புமிகு அமைச்சர்களிடம்  வழங்குகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்