Published on 17/09/2019 | Edited on 17/09/2019
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி இன்று (செப்.17) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திலிருக்கும் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடைகள், காய்கறிச் சந்தை, 5 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.