Published on 22/12/2019 | Edited on 22/12/2019

ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சபை, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. மேலும் பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர்.