
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இன்று (07.09.2021), செய்தித்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில் பேசிய செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், “தமிழ்நாட்டில் முதல்முறையாக பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளராக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
அதனடிப்படையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில், ‘பத்திரிகையாளர்கள் நல வாரியம்’ அமைக்கப்படும். பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ. 3 இலட்சத்தில் இருந்து ரூ. 5 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. இளம் பத்திரிகையாளர்கள் பத்திரிகை சார்ந்த உயர் கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.