Published on 11/06/2018 | Edited on 11/06/2018
மேல்நிலைபடிப்பில் மொழிப்பாடம் ஒரே தாளாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேல்நிலை கல்வியான பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இனி மொழி படங்களில் தாள் ஒன்று, தாள் இரண்டு என்ற முறையை மாற்றி ஒரே தாளாக மாற்ற திட்டமிட்டு அதற்கான ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.


அந்த ஆணையின்படி இனி தமிழ் மற்றும் ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்பதை மாற்றி ஒரே தாளாக கற்பிக்கப்படும் மற்றும் தேர்வு நடத்தப்படும் என தெரிவிப்பட்டுள்ளது. இந்த ஆணை இந்த கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அரசு சார்பில் பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது