Skip to main content

கோவை அருகே பான் மசாலா ரகசிய தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Published on 28/04/2018 | Edited on 28/04/2018

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமான முறையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பான்மசாலா தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பான்மசாலா தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் கொண்ட மூட்டைகளை  கைப்பற்றினர்.

 

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் எனும் இடத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள 15 அடி சுற்றுச்சுவர் கொண்ட ஒரு ரகசிய தொழிற்சாலையில் ஊர் மக்களுக்கே தெரியாமல் பான் மசாலா உற்பத்திசெய்து வந்தது அப்பகுதி மக்களுக்கே பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
 

panmasala

 

அந்த தொழிற்சாலையில் சட்டவிரோத முறையில் பான் மசாலா உற்பத்தி செய்துவருவதாக எழுந்த புகாரில் நேற்று போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ரகசிய தொழிற்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக  பல கோடி மதிக்கத்தக்க பான்மசாலா பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு பான்மசாலா மூட்டைகளை கைப்பற்றினர். மேலும் அந்த ஆலையில் வி.ஐ.பி என்ற பெயரில் பான்மசாலா பாக்கெட்டுகள் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

 

இதைப்பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்களுக்கு இப்படி ஒன்று இங்கு நடப்பதே தெரியாது எனவும், இரவில் மட்டும் இந்த பகுதிக்கு லாரிகள், ஆட்டோக்கள் வந்துபோகும் மற்றபடி அங்கு என்ன நடக்கிறது என்றுகூட அதிகம் பேருக்கு தெரியாது எனவும் கூறினர்.

 

panmasala

 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த தொழிற்சாலை டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும், இது தொடர்பாக ஆலையின் மேலாளர்  ரகு என்பவரை பிடித்து விசாரித்து வருதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சார்ந்த செய்திகள்