Skip to main content

இணையத்தில் பெயர் உள்ளது... வாக்குச்சாவடியில் பெயர் இல்லை!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் குடியிருப்பவர்கள் கணவன் மனைவியான ஆறுமுகம், முருகேஸ்வரி . ஆறுமுகம் தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிபவர். அவரது மனைவி முருகேஸ்வரி வணிக வரித்துறை அதிகாரி. இவர்கள் வாக்களிப்பதற்காக விடுப்பெடுத்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கான வாக்குச்சாவடி எண் 166 ஆகும். கடந்த மக்களவை தேர்தல் வரை இந்த வாக்குச்சாவடி மையத்தில் தான் வாக்களித்திருக்கிறார்கள்.

nanguneri by assembly election voter list not available for online name available


இடைத்தேர்தலில் தற்போது வாக்களிப்பதற்காக வந்த போது நம்மிடம் கூறினார்கள். அப்போது எங்களது இருவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இங்குள்ள பேரூராட்சி அதிகாரிகளும் பூத் ரசீது கொடுத்திருக்கிறார்கள். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் மூலம் எங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. ஆனால் வாக்களிக்க வந்த போது, வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள், எங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இலலை என்றும், அதன் காரணமாக அதிகாரிகள் எங்களை திருப்பி அனுப்பியுள்ளன. 

nanguneri by assembly election voter list not available for online name available


அவர்களிடம் விவரம் கேட்டதற்கு, ஆர் ஓ அல்லது தாசில்தாரிடம் பேசுங்கள் என்கிறார்கள். அவர்களிடம் விவரத்தை சொன்னேன். இணையதளத்தில் உங்கள் பெயர் இருந்தால், வாக்களியுங்கள் என்று கூறி முடித்து கொண்டனர். இப்படி இருக்கையில் எங்களால் வாக்களிக்க முடியவில்லை. இதில் குளறுபடி நடந்துள்ளது என்கின்றன. 

 

சார்ந்த செய்திகள்