Published on 28/10/2019 | Edited on 28/10/2019
திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு நான்காவது நாளாக 77 மணி நேரத்தை கடந்து முயற்சி எடுத்து வருகிறது.
இரண்டு வயது குழந்தை சுஜித் மீட்பதற்கான முழு முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி குழந்தை சுஜித்தை மீட்பது குறித்து முதல்வரிடம் கேட்டறிந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தையை மீட்க தாம் பிரார்த்திப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
My prayers are with the young and brave Sujith Wilson. Spoke to CM @EPSTamilNadu regarding the rescue efforts underway to save Sujith. Every effort is being made to ensure that he is safe. @CMOTamilNadu
— Narendra Modi (@narendramodi) October 28, 2019