Published on 02/02/2019 | Edited on 02/02/2019

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

வழக்கு தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த சயான், திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்று நடை பெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளி உதயகுமாரை தவிர மற்ற 9 பேரும் உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் ஆஜராயினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை 11.30 மணிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.