வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவில் சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் வந்துயிருந்தனர். நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுயிருந்தது.

இதில் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய கோரிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதன்படி நவம்பர் 15ந்தேதி, நலத்திட்ட உதவிகள் கேட்டுயிருந்தவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சண்முகசுந்தரம், அமைச்சர் வீரமணி மற்றும் அதிமுக பிரமுகர்கள் வருகை தந்துயிருந்தனர்.
இந்த விழாவில் தொகுதியின் எம்.எல்.ஏ என்கிற முறையில் எம்.எல்.ஏவும், திமுக மத்திய மா.செவுமான நந்தகுமாரும் கலந்துக்கொண்டுயிருந்தார். அவர் பேசும்போது, "எம்.எல்.ஏ என்கிற முறையில் மக்கள் என்னிடமும் பல கோரிக்கை மனுக்களை தந்துள்ளார்கள். அதனை நான் மாவட்ட ஆட்சியர் உட்பட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு என் கைப்பட கடிதம் எழுதிய கடிதத்துடன் அனுப்பியுள்ளேன்.
அந்த கோரிக்கை மனுக்கள் எல்லாம்மே தகுதியானவை. அப்படியிருந்தும் நான் அனுப்பிய மனுக்களுக்கு இன்றுவரை அதிகாரிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை. முதலமைச்சர் சிறப்பு மனு நீதிநாள் முகாமில் தந்த மனுக்களுக்கு உடனடியாக தந்துள்ளீர்கள். இதுவும் நல்லது தான். ஆனால், மக்கள் பிரதிநிதியான நாங்கள் மக்களிடம் வாங்கி தரும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் தானே சரியாக இருக்கும், மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பும் போது நான் என்ன பதில் சொல்வது" என தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
உடனே அதிருப்தியான பால் கூட்டுறவு சங்க மாவட்ட சேர்மன் வேலழகன், இங்கு வந்து பிரச்சனை செய்ய வேண்டாம் என கோபமாக சொன்னார்.
ஏன் எங்க எம்.எல்.ஏ சொல்லக்கூடாதா என மேடைக்கு கீழிருந்த கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதனால் திமுக – அதிமுக பிரமுர்கள் இடையே பெரிய சச்சரவு ஏற்பட்டது. இதனை ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீஸார் வந்து சமாதானம் செய்தனர்.
நலத்திட்டம் வழங்கிவிட்டு பேசிய அமைச்சர் வீரமணி, "விடுப்பட்டவர்களுக்கு தரப்படும்" என வாக்குறுதி தந்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். இதனால் அங்கு இரண்டு மணி நேரம் பெரும் பதட்டம் ஏற்பட்டது.