



Published on 23/12/2021 | Edited on 23/12/2021
நைஜீரியா நாட்டில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் இரண்டு பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சை முடிந்து குணமடைந்து அவர்களை இன்று வீட்டிற்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது. விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சான்றிதழ்களையும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வின் போது உடன் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.