



Published on 01/06/2021 | Edited on 01/06/2021
தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதே சமயம் மக்கள் சிகிச்சை பெற பல்வேறு இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்களையும், பல மருத்துவமனைகளில் கூடுதலாக ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளையும் செய்துவருகிறது. அதுபோல், சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை ஊரக தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.