Skip to main content

சென்னை வியாசர்பாடியில் மினி க்ளினிக் திறப்பு விழா... (படங்கள்)

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

தமிழகத்தில் முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
 


தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, கிராமப்புறம் 1400, சென்னை 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் மினி கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன. இந்த மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதாரத்துறை பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். மினி கிளினிக்குகள் காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் 07.00 மணி வரையும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


சென்னை வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மினி க்ளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேரில்வந்து துவக்கிவைத்தார். 


 

சார்ந்த செய்திகள்