குமரியில் 600 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில் ஐம்பொன் சிலை மற்றும் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பிரசித்த பெற்ற முக்கியமான பழமைவாய்ந்த சிவன் கோவில்களில் ஓன்றான திக்குறிச்சி மகாதேவா் கோவில் சிவாலயம் ஒடும் பக்தா்கள் செல்ல கூடிய இரண்டாவது கோவில் ஆகும்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் அதிகம் பேர் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு வரும் வருமானத்தில் அக்கறை காட்டும் அறநிலையத்துறை, கோவிலை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை என பக்தா்கள் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் கோவிலுக்கு பூஜை செய்ய போன பூஜாரி கோவில் நடை திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலையையும் தங்க நகைகளையும் காணவில்லை. மா்ம ஆசாமிகள் அதையெல்லாம் திருடி சென்று வி்ட்டனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளின் புகாரையடுத்து தக்கலை காவல் துணை கண்காணிப்பாளா் கார்த்திகேயன் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
Published on 01/09/2018 | Edited on 01/09/2018