Skip to main content

பாண்டி ஜூஸ் என்கிற பெயரில் சாராய விற்பனை அமோகம்....

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

ஓராண்டுக்கு மேலாக பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் வாடகை வீட்டில் வசித்து பாண்டி ஜூஸ் என்கிற பெயரில் பாக்கெட் சாராயத்தை அமோகமாக விற்பனை செய்து மாட்டிக் கொண்டுள்ளனர் சாராய வியாபாரிகள்.

 

illicit liquor seized

 

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உதய நகரிலுள்ள ஒரு வீட்டில் ஜூஸ் தயாரிப்பதாக கூறிக்கொண்டு,கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து பாண்டி ஜூஸ் என்கிற பெயரில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முகவர்கள் மூலம் அனுப்பி விற்பனை செய்த வந்தனர். இந்த செய்தி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவர, பொறி வைத்துப்பிடிக்க முடிவு செய்து, அந்த பகுதியை தொடர்ந்து நோட்டமிட்டு வந்து தற்போது பிடித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்," அடிக்கடி பொதுமக்கள் அங்கு சாராயம் விற்பதாக புகார் கூறினர். ஆனால் காவல்துறையோ இதுகுறித்து தெரிந்தும் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் விவகாரம் பெரிய அளவில் மாறியதால் பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து 2 கார், 2 பைக் கிளம்பி சென்றது. பைக்கில் சென்றவர்கள் பெரிய பெரிய பைகளை கொண்டு சென்றனர். எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரவு திடீரென அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால், அறையை திறந்ததுமே சாராய வாடை முகத்தில் அடித்தது. ஏராளமான சாராய கேன்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. அங்கு இரண்டு பெண்கள் பாக்கெட்களில் பேக்கிங் செய்து கொண்டிருந்தனர். அந்த பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது சாராயம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளோம்.

புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த ஏறி சாராயத்தில் தண்ணீர் கலந்து பாக்கெட்டில் 150 மில்லி 200 மில்லி என அடைத்து பேக் செய்து, அதில் பாண்டி ஜூஸ் என்று வாசகம் பதிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வந்தது. விற்பனை ஆறு மாதமாக நடந்திருக்கிறது." என்கிறார் .

சாராய வியாபாரியோ, " வாரம் ஒருமுறை காரைக்கால் அல்லது புதுச்சேரி சென்று ஸ்பிரிட் வாங்கி வருவோம். பின்னர் அவற்றை சாராயமாக தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்தோம். காவல்துறைக்கு தெரியாமல் அணுவும் அசையாது. காவல் துறைக்கு தேவையானதை கொடுத்து தான் இந்த தொழிலை செய்துவந்தோம், ஏதோ அவர்களுக்கு உள்ள நெருக்கடி எங்களை மாட்டிவிட்டுடாங்க." என்கிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்