கரூர், ஜெகதாபி கிராமத்தையடுத்து பொரணி என்கிற ஊரின் ஒதுக்கு புறத்தில் கிரானைட் கல்குவாரி நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரிய சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கிராமத்தில் குழந்தைகள் பொது இடங்களில் விளையாடுவதற்கு அதிக விருப்பமாக இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் ஜெகதாபி கிராமத்திற்கு அருகில் உள்ள பொரணி என்கிற ஊரில் 13, 10, 15, வயதுடைய 5 குழந்தைகள் பொது வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஊரின் ஒதுக்குப்புறத்தில் கரூர் ரவி என்பவருக்கு சொந்தமான கிரானைட் குவாரி ரொம்ப காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. அதனால் அந்த பகுதியில் முட்களும் புதர்களும் மண்டி இருந்தால் யாரும் அந்த பக்கம் செல்வதை தவிர்த்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ஜேசிபி இயந்திரம் கொண்டு அங்கிருந்த பாறைகளை சுத்தம் செய்தனர். அப்போது தோண்டப்பட்ட பாறைகளுக்கு நடுவே மழை நீர் நிரம்பி குளம் போல் காட்சியளித்தது. இந்த நேரத்தில் அந்த பகுதியில் விளையாட வந்த குழந்தைகள் ஆர்வத்தில் தண்ணீரை பார்த்ததும் உள்ளே இறங்கி விளையாட ஆரம்பித்தனர்.
கிரானைட் குவாரியில், அதிகமான ஆழத்தில் பள்ளம் தோண்டி இருந்தால் குழந்தைகள் பள்ளத்தில் மூழ்கி போனார்கள். கிராமத்து மக்கள் குழந்தைகளை மீட்க பல்வேறு முயற்சிகள் செய்தனர். கடைசியில் தீயணைப்பு துறையினர் வந்து நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை மீட்டனர். மற்ற இரண்டு குழந்தைகளான கலையரசி (வயது 14), காவியாவை (வயது 8) மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளின் உடலை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தனர். அப்பாவி குழந்தைகளை கிரானைட் பள்ளம் உயிரோடு விழுங்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.