Skip to main content

கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி சாலை மறியல் 

Published on 08/08/2018 | Edited on 27/08/2018
kalaignar

    
தி.மு.க தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்ய கடற்கரையில் இடம் கொடுக்க தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் அனுமதி வழக்க கோரி ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் ஊரில் சாலை மறியல் நடந்தது.
 

 

 

    தி.மு.க தலைவர் கலைஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி செவ்வாய் கிழமை மாலை உயிரிழந்தார். அவரது உடலை சென்னை கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் கடற்கரையில் இடம் ஒதுக்க முடியாது என்றும் மாற்று இடம் ஒதுக்குவதாகவும் தகவல் வெளியானது.
 

 

 

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க தொண்டர்கள் சென்னை நோக்கி கிளம்பி உள்ளனர். ஆனால் கடற்கரையில் கலைஞர் உடல் அடக்கம் செய்ய இடம் இல்லை என்ற தகவல் பரவியதும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதனின் சொந்த ஊரான மறமடக்கி கிராமத்தில் திரண்ட தி.மு.க வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கடற்கரையில் இடம் கொடு என்று முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

 


 

சார்ந்த செய்திகள்