Skip to main content

லாரி மீது ஜீப் மோதல்; 3 பேர் பலி!

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
Jeep truck incident on Vellore Dt Konavattam Chennai - Bengaluru NH

தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கொணவட்டம் என்ற பகுதியில் அமைந்துள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இன்று (04.12.2024) அதிகாலை லாரி நின்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் அவ்வழியாக ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில் ஓட்டுநர் உட்பட 4 பேர் வந்துள்ளனர். அப்போது இந்த ஜீப் தீடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் சிக்கி ஜீப்பில் இருந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதே சமயம் படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் சிக்கி சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த மாலிக் பாஷா உள்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்