Skip to main content

போலி மதுபானம் தயாரிக்கும் ஆலையில் இருந்து மூலப்பொருட்களுடன் ஒருவர் கைது...

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

வேலூர் புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு போலி மதுபான ஆலை தொடர்பாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார், வேலூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த மேல்நிம்மியம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் பகுதியில் சோதனை செய்தனர். 

 

kirubahar@nakkheeran.in (20226)

 

 

சோதனையில் தங்கராஜ் என்பவருடைய  வீட்டில் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்தனர். அங்கு போலி மதுபானம் தயாரிக்க தேவையான பாக்கெட் செய்யும் மிஷின், எஸ்ஸென்ஸ், கலர் மிக்சர், போலி மதுபானம் நிரப்பும் கோவா காலி பாக்கெட்டுகள், பாட்டில்கள், ஆல்கஹால் அளவிடும் மீட்டர், மற்றும் இதர உபகரணங்கள் கைப்பற்றினர்.

இங்கு தயாரிக்கப்படும் சரக்குகள் டாஸ்மாக் கடைகள் உள்ள பகுதிகளிலேயே விற்பனை செய்துள்ளனர். இதில் முக்கிய நபரான தங்கராஜ் அக்டோபர் 14 ந்தேது கைது செய்யப்பட்டு வாணியம்பாடி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து  வழக்கு பதிவு செய்து தங்கராஜ் கைது செய்து வாணியம்பாடி மதுவிலக்கு காவல் துறையினர் , இதன் பின்னணியில் இன்னும் யார், யார் கூட்டாளிகளாக உள்ளார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்