சென்னை மாம்பலம் காவல் சரகத்தில் ‘ஸ்பா’ என்ற பெயரில் இல்லீகல் ஆக்டிவிட்டியில் ஈடுபட்ட நபரை கொத்தாகத் தூக்கிவந்து விசாரித்திருக்கிறார் ‘மணி’யான இன்ஸ்பெக்டர். “சார், காசு வாங்கிட்டு இப்படி டார்ச்சர் பண்ணுறது நல்லா இல்ல..” என சவுண்ட் விட்டிருக்கிறது எதிர்பார்ட்டி. உடனே, பொளேரென்று கன்னத்தில் அறைவிட்ட இன்ஸ்பெக்டர், “யாருடா உன்கிட்ட காசு வாங்கினது? நானாடா வாங்கினேன்?” என்று உறுமியிருக்கிறார்.
அதற்கு, “முந்தாநாள் கூட உங்க பேரைச் சொல்லி காசு வாங்கிட்டு போனாங்க... நான் இதுவரைக்கும் ஒன்னேகால் லட்சம் கொடுத்திருக்கேன்” என்றிருக்கிறது ஸ்பா பார்ட்டி. பின்னர் விசாரித்ததில், ஸ்டேஷன் எழுத்தரும், வேறு ஸ்டேசனுக்கு மாறுதலாகிப் போன ‘லிங்க’மானவரும் கைவரிசை காட்டியது தெரியவந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில், உண்மையை ஒத்துக்கொண்ட இருவரும், “இந்த ஒரு தடவை எங்களை மன்னிச்சிடுங்க அய்யா..” என்று சாஸ்டாங்கமாக காலில் விழுந்திருக்கின்றனர். “சரி.. இனிமேல் இப்படி பண்ணாதீங்க”ன்னு இன்ஸ்பெக்டர் பெரிய மனது பண்ணி விட்டுவிட்டார்.
ஆனால், அந்த நேர்மையான இன்ஸ்பெக்டரை தற்போது இடமாறுதல் செய்துவிட்டார்கள். “வெல்லம் தின்னது ஒருத்தர், விரல் சூப்பினவரு மாட்டிகிட்டாரு… ஏரியா விட்டு ஏரியா போனாலும், திரும்பவும் பழைய இடத்துக்கே வந்து வசூல் பண்றாங்க... எதிர்த்து கேட்ட அய்யாவையும் மாத்திட்டாங்க..” என கீழ் மட்டத்தில் இருக்கிற காவலர்கள், ‘மணி’யான இன்ஸ்பெக்டரை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.