Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

salem district, mettur dam water level

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

 

இன்று (19/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,001 கனஅடியில் இருந்து 12,079 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.84 அடியாகவும், நீர்இருப்பு 53.61 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.

 

இதனிடையே காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 11,000 கனஅடியாக குறைந்தது.

 

 

சார்ந்த செய்திகள்