Skip to main content

பள்ளி சமையலர் தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் இந்த கொடுமையா? தொடரும் சாதிய தீண்டாமை!!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018

திருப்பூரில் அரசு பள்ளியில் சத்துணவு கூட சமையலளராக பணியாற்றிவந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை சாதிவெறியால் அங்கிருந்து வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

 

UNCOUTH

 

 

 

திருப்பூரை அடுத்த அவிநாசியை அடுத்த திருமலைக்கவுண்டன் பாளையத்திலுள்ள அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண் சத்துணவு கூடத்தின் சமையலளராக  வேலை செய்துவந்தார். ஆனால் அங்குஉள்ள சில உயர்சாதி பிரிவினர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பம்மாள் சமைத்ததை எங்கள் பிள்ளைகள் சாப்பிடாது. எனவே பாப்பம்மாளை வேலையிலிருந்து நீக்குங்கள் இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என கூறியுள்ளதாக தெரிகிறது.

 

மேல்வகுப்பினர் தொடர்ந்து போராட்டம் மற்றும் மிரட்டங்கள் தொடர்ந்து வந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரியே நேரில் சென்று பேச அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். பல இன்னல்களை தாண்டி இந்த வேலைக்கு வந்ததாக பாப்பம்மாள் கண்ணீர் வடித்த நிலையில் உயர்சாதி வகுப்பினரின் தொடர்மிரட்டலை அடுத்து பாப்பம்மாள் வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.    

 

அறிவியல், கல்வி வளர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு என எல்லாவற்றிலும் வளர்ந்துவிட்டோம் என நினைக்கும் உலகில் இதுபோன்ற தீண்டாமை சம்பவங்கள் இன்னும் அரங்கேறிக்கொண்டுதான் இருகின்றன.

 

சார்ந்த செய்திகள்