ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்துள்ள தேர்வாணையம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதித்துள்ளது.
குரூப்-4 தேர்வில் பணிக்கு ஏற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அலுவலக உதவியாளர், சுருக்கெழுத்தர் போன்ற பணிக்கு 5 லட்சம் ரூபாயும், கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு எட்டு லட்ச ரூபாய் வரையிலும் வசூல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பணிக்கு ஏற்றவாறு பணம் வசூல் செய்யப்பட்டு, அதற்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் போடப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம்பெற வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது வரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது எனவே சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றி விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.