Published on 19/03/2020 | Edited on 19/03/2020
கரோனா எதிரொலி காரணமாக குரூப்-1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெரிய நகைக் கடைகள், ஜவுளிக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 தேர்வை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் மறு தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.