கர்நாடகா மாநிலம் தும்கூர் குடிப்பல்லி பகுதியில் வேலை செய்து வருபவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த மது- அம்பிகா தம்பதியினர். இவர்களுக்கு 10 வயதில் பத்மா என்கிற குழந்தையும், 6 வயதான விஜய் என்கிற குழந்தையும் உள்ளது. இந்த குழந்தைகளை அம்பிகாவின் தாயார் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
தனது பாட்டி வீட்டில் பாட்டியின் அரவணைப்பில் இருந்து வந்தனர். அங்கு தனது பாட்டி சித்திரவதை செய்வதாக குழந்தைகள் இருவரும் மார்ச் 12ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் வாணியம்பாடி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் சுற்றி சுற்றி வந்தனர். இதனைப்பார்த்த கடைக்காரர்களில் ஒருவர் அந்த குழந்தைகளை அழைத்து விவரத்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களின் செல்போன் எண்ணை வாங்கி தகவல் தந்தனர்.
குழந்தைகளை வாணியம்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களும் பெற்றோர்களுக்கு தகவல் தந்தனர். அவர்கள் அதிர்ச்சியாகி உடனே கார் மூலமாக வாணியம்பாடிக்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு காவல்துறையினர் குழந்தையை ஒப்படைத்தனர்.