கோமுகி நதி அணையில் இருந்து அக்டோபர் 1- ஆம் தேதி முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையில் இருந்து 2020- 2021 ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கரும், ஆக மொத்தம் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிப் பெறுவதற்கு கோமுகி நதி அணையிலிருந்து 01/10/2020 முதல் தண்ணீர் திறந்து விட அணையிட்டுள்ளேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.