கோவை அதிமுக அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள அதிமுக அலுவலகம் வந்த அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது முதல்வர் எடப்பாடியர் மழை வருவதற்கு முன்னர் 4 கூட்டங்கள் நடத்தி உள்ளார். உள்ளாட்சி பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் துரை இணைத்து கூட்டங்கள் நடத்தி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மானிட்டர் அதிகாரி மற்றும் இன்சார்ஜ் அதிகாரிகள் மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமித்து உள்ளார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தனித் தனியாக ஐ ஏ எஸ் அதிகாரிகள் போடப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் தூர்வாரும் ஜே சி பி இயந்திரங்கள் சூப்பர் செக்கர்ஸ் இயந்திரம் கம்பரசர் மோட்டார் தயாராக உள்ளது. மேலும் கூடுதலாக தேவை பட்டால் வாடகைக்கு வாங்கி உபயோகப்படுத்த படும். மரம் அறுக்கும் இயந்திரங்கள் நகராட்சி மாநகராட்சி அனைத்து பகுதிகளும் தயாராக உள்ளது. மழை அதிகமாக வரக்கூடிய சூழலில் பொது மக்கள் தங்கும் இடங்களும் தயார் நிலையில் வைத்து உள்ளோம்.
துணை முதல்வர் பதவி நான் கேட்டதாக தினகரன் கூறி உள்ளாரா. இந்த மாதிரி காமெடி அவர் நிறைய பண்ணி கொண்டு இருப்பார். இதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரிவதில்லை. இந்த கட்சியை பெரும் பாடுபட்டு அம்மா கொண்டு வந்து உள்ளார். அதனால் நானும் தங்கமணி தான் நீங்கள் விலகி கொள்ளுங்கள் என்று சொல்லி விளக்கியது.
திருப்பரங்குன்றத்தில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அதை பார்த்த பின்னர் தான் அவர் ஆரம்பித்து விட்டார். ஓபிஎஸ் ஆரம்பித்து வரிசையாக வருகிறார். எங்களுக்கு அவர் பல்வேறு நிலைகளில் அம்மா மறைவிற்குப் பின் ஒன்றாக தான் இருந்தோம். அதன் பிறகு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் அண்ணன் தம்பி போன்று கட்சியை வழி நடத்துகிறார்கள். 10 ஆண்டுகள் இல்லை.... அம்மாவால் விரட்டி அடிக்கப்பட்டார். இன்று பேசி கொண்டு இருக்கிறார். அவர் ஏதாவது பேசி கொண்டு இருப்பார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்றே அண்ணன் ஓபிஎஸ் பதில் சொல்லி விட்டார். இந்த கட்சி எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அம்மா வளர்த்த கட்சி. இந்த மாதிரி இவர்கள் என்ன செய்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. திருப்பரங்குன்றம் தேர்தலில் பார்த்தால் அவர்கள் 20 ரூபாய் நோட்டை வைத்து ஆர்கே நகர் தேர்தல் போன்று வரலாம் என்று பார்த்தார்கள். ஆனால் இது நடக்காது தொண்டர்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். எங்களை விட அண்ணன் ஓபிஎஸ் அவர்களை நன்றாக தெரியும். அதனால் அவர் அப்படி பேசி கொண்டு இருக்கிறார்.