மாவட்ட அளவில் பெரும்பாலான அரசு அலுவங்களில் மாவட்ட அளவில் உள்ள பெரிய அதிகாரிகளை சந்தித்து தங்கள் குறைகளை, புகார்களை சந்தித்து கொடுக்கச் செல்லும் பொதுமக்கள் பலமணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலக அறைகளில் வேறு பணியில் இருக்கும்போது காத்திருந்துதான் சந்தித்து புகார் கொடுத்துவிட்டு திரும்ப வேண்டும். இது பல பெரிய அலுவலங்களில் நாம் பார்க்கும் தினசரி காட்சிகள்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறைகள் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பொதுமக்களின் சிரமத்தை நல்வழியில் போக்கி வருகிறார் எப்படி தெரியுமா?. அவரது அறை முன் காத்திருப்பு ஹாலில் 20க்கும் மேற்ப்பட்ட சேர்கள் போடப்பட்டுள்ளன. அதிலே அமரச் சொல்கிறார்கள். அப்படி நீண்ட நேரம் சும்மா உட்கார்ந்து இருக்கும்போது, இன்னைக்கு அதிகாரிய பாக்க முடியுமா? பார்க்க முடியலன்னா, நாளைக்கும் வரணுமா? என்ற ஒரு விதமான மன உளைச்சல் வரும். அப்படி வரக்கூடாது என்பதற்க்காக அங்கே ஒரு டேபிள் மீது தமிழ், ஆங்கில நாளிதழ்கள், நக்கீரன் போன்ற வார பத்திரிகைகள் அனைத்தையும் வாங்கி பரப்பி வைத்துள்ளார்.
காத்திருப்போர் அந்த நேரத்தில் தினசரி பேப்பர் படித்து தகவல்களை தெரிந்து கொள்ளவும் காத்திருக்கும் நேரம் போவது தெரியாமலும், போரடிக்காமலும் இருக்கிறது. இதுபோன்ற மாநில மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளும் தங்கள் அலுவலங்களில் இதனை பின்பற்றலாமே... அவர்களை சந்திக்கபோகும் மக்களுக்கு பயனாகவும் இருக்கும். அந்த அதிகாரிகள் மீது மரியாதையும் கூடும் அல்லவா? என்கின்றனர் இங்கு வரும் பொதுமக்களும் முக்கியஸ்தார்களும்.