Skip to main content

நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லத்தில் கலப்படமா? - உணவு பாதுகாப்புதுறை ஆணையர் சுற்றறிக்கை!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

palm

 

ரசாயனக் கூறுகள் இல்லாத இயற்கை உணவுப் பொருட்கள் என்ற பெயரில் விற்கப்படும் நாட்டுச்சர்க்கரை, பனை வெல்லம், அச்சு வெல்லம் ஆகியவற்றில் ரசாயனங்கள் கலக்கப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையராக உள்ள செந்திகுமார் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மக்கள் அதிகம் பயன்படுத்தும் நாட்டுச் சர்க்கரை, அச்சு வெல்லம், பனை வெல்லம் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். அப்படி ஒருவேளை ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்களைத் தொடர்ந்தே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 

 

சார்ந்த செய்திகள்