என்ஜின் இல்லாத இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்தவருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இளைஞர் ஒருவர் என்ஜின் இல்லாத இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தார் அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட சேத்தியாத்தோப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் அந்த இளைஞரை மடக்கி ஏன் ஹெல்மேட் போடவில்லை என்று அபராதம் விதித்தார். அந்த இளைஞர் எஞ்சின் இல்லாத வண்டியை தள்ளிக்கொண்டுதான் வந்தேன் என காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இது சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் அவருடன் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் ஸ்ரீ கடலூர் ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளார்.