Skip to main content

'தமிழே அறம்! தமிழே அரண்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

Published on 20/02/2025 | Edited on 20/02/2025

 

'Tamil is virtue! Tamil is a fortress' - Chief Minister M.K. Stalin's post

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலில்  பெண்கள் கோலமிட்டனர். அந்த வகையில் சென்னை அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் உலக தாய்மொழி தினமான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்! தமிழே அறம்! தமிழே அரண்!' என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்