Published on 21/03/2021 | Edited on 21/03/2021

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் தாக்கல் செய்யப்பட்ட 7,238 மனுக்களில் 1,855 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் 3,003 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நாளை வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. நாளை வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள். எனவே மாலை மூன்று மணிக்கு மேல் இறுதி பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறுப்படுகிறது.