/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ration-shop-file-2_0.jpg)
இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி (12.11.2023) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்று தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் வகையில் நவம்பர் 3 மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி (நாளை) வேலை நாட்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த இரு வேலை நாட்களையும் ஈடு செய்யும் வகையில், நவம்பர் 13 ஆம் தேதி மற்றும் நவம்பர் 25ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)