Published on 18/04/2022 | Edited on 18/04/2022

திருச்சி, முதலியார் சத்திரம் குட்ஷெட் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பாலக்கரை போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழில் என்கிற எழிலரசன்(27), முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த பென்னமீன் ஆகாஷ்(19), ஆரோக்கிய செல்வகுமார்(19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.