Skip to main content

திருவிழாவில் பெண் காவல் உதவி காவல் ஆய்வாளர் கழுத்தறுப்பு... நெல்லையில் பரபரப்பு!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

Female Assistant Police Inspector beheaded at temple festival

 

நெல்லையில் அபராதம் விதித்தற்காக காவல்துறை பெண் உதவி ஆய்வாளரை பழி தீர்ப்பதற்காக கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்துள்ள பழவூர் கிராமத்தில் நேற்று கோவில் கொடை திருவிழா நடந்திருக்கிறது. சுத்தமல்லியை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். ஆறுமுகம் என்ற நபருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாகனத்தில் செல்லும் பொழுது குடிபோதையிலிருந்ததாக கூறி காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா அபராதம் விதித்திருந்தார். இந்நிலையில் கோவில் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்த மார்கரெட் தெரசாவை பார்த்தவுடன் அந்த ஆறுமுகம் என்ற நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்ற, கையில் வைத்திருந்த சிறிய கத்தி மூலம் மார்கரெட் தெரசாவின் கழுத்தில் காயம் ஏற்படுத்தும் அளவிற்கு அறுத்துள்ளார்.

 

இதனையடுத்து அருகில் இருந்த சக காவலர்கள் ஆறுமுகத்தை கைது செய்ததோடு, மார்கரெட் தெரசாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கழுத்திலும், கன்னத்திலும் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா. இந்த சம்பவத்தில் ஆறுமுகம் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கஞ்சா விற்ற இளைஞர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Youth arrested for selling cannabis

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம் எம்ஜிஆர் நகர் சமுதாய கூடம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனையில் பாசில் என்கிற பப்பாளி (27) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

கள்ளச்சாராய எதிரொலி; ஈரோட்டில் பெண் உள்பட 15 பேர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
counterfeit liquor echo; 15 people, including a woman, were arrested in Erode

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பவானி கூடுதுறை மெயின்ரோடு பூபதி(40), ஈரோடு அசோகபுரம் ராமநாதன்(36), பூதப்பாடி ரமேஷ்(41), வெள்ளாங்கோவில் சுதாகர்(43), வெள்ளாபாளையம் கோபாலகிருஷ்ணன்(41) புளியம்பட்டி செந்தில்(43), கொண்டையம்பாளையம் சுமந்த்(33), கோபி கணக்கம்பாளையம், நடராஜ் மனைவி பொன்னுதாய்(59) உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக எந்தெந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.