சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை அமைப்பதன் மூலம் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாய நிலங்கள் பெரியளவில் பாதிப்படைகின்றன. அதனால் இந்த திட்டத்தை கைவிடவேண்டும்மென அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.
இந்த 8 வழிச்சாலையால் திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிப்படைகின்றன. இதனை கண்டித்து திருவண்ணாமலை, செங்கம், சேத்பட், செய்யார் பகுதிகளில் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் அதிகமான விவசாயிகள், தங்களது குடும்பத்தோடு ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
எடுக்காதே, எடுக்காதே எங்களது நிலங்களை எடுக்காதே, பறிக்காதே, பறிக்காதே எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்காதே என குரல் எழுப்பியபடி, கையில் தட்டி ஏந்திக்கொண்டு உண்ணாவிரதம்மிருந்து வருகின்றனர்.