Published on 04/01/2020 | Edited on 04/01/2020
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில பாடப்பிரிவை படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இயிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதற்கிடையில் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததுள்ளது. மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், நீட் தேர்வை கட்டாயமாக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் புதிய சட்டத்திருத்தத்தால் கிராமப்புற மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.