Published on 26/04/2019 | Edited on 26/04/2019
வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே நேற்றுமுன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் படிப்படியாக தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறும். பங்களாதேஷ் நாடு இந்த புயலுக்கு 'ஃபானி' என பெயரிட்டுள்ளது.
இந்த புயல் தமிழக கரையை நெருங்கும்போது மிக கனமழை பெய்யக் கூடும் என்றும், அப்போது பலத்த காற்று வீசக்கூடும், அதனால் சேதமும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரை பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.