Laapataa Ladies Title changes to lost ladies for oscar campaign

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் பரிந்துரைக்கப்படும் நிலையில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து பாலிவுட் படமான ‘லாபடா லேடீஸ்’(Laapataa Ladies) பரிந்துரைக்கப்பட்டது.

Advertisment

இந்தப் படத்தை இயக்குநர் கிரண் ராவ் இயக்கியிருந்தார். அமீர் கான் இணைத் தயாரிப்பாளராக தயாரித்திருந்த இப்படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராம் சம்பத் இசையமைத்திருந்தார். திருமணமான இரண்டு இளம் பெண்கள், தங்கள் கணவரின் வீட்டிற்கு செல்லும் போது இரயிலில் ஆள்மாறி சென்ற நிலையில் பின்பு தங்களது கணவரிடம் சென்றார்களா இல்லையா என்பதை காமெடி, அரசியல் நையாண்டி கலந்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 1 அன்று வெளியான இப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

Laapataa Ladies Title changes to lost ladies for oscar campaign

இந்த நிலையில் ஆஸ்கர் விருது போட்டிற்காக படத்தை புரொமோஷன் செய்யும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. அதற்காக உலகளவில் பார்வையாளர்களை கவருவதற்கு படத் தலைப்பில் மாற்றம் செய்துள்ளது. ‘லாபடா லேடீஸ்’ என்ற தலைப்பை ‘லாஸ்ட் லேடீஸ்’(Lost Ladies) என மாற்றியுள்ளது. இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது.