மார்ச்-1 ஆம் தேதி முதல் விழுப்புரத்தில் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
![Electric train between Villupuram - Mayiladuthurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/ATgaK5uAhjQLtyMQztC5LDqhyRnkXUw840nFCsivQvI/1582712028/sites/default/files/inline-images/1111_52.jpg)
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விழுப்புரத்தில் காலை 5:55க்கு புறப்படும் 56873 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், மயிலாடுதுறையில் இருந்து காலை 5:40க்கு புறப்படும் 56874 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், விழுப்புரத்தில் பிற்பகல் 2:30க்கு புறப்படும் 56875 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3:45க்கு புறப்படும் 56876 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், விழுப்புரத்தில் மாலை 5:40க்கு புறப்படும் 56877 விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:45க்கு புறப்படும் 56878 மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், விழுப்புரத்தில் இருந்து மாலை 6:55க்கு புறப்படும் 56886 காட்பாடி பயணிகள் ரயில் மற்றும் காட்பாடியில் இருந்து அதிகாலை 4:55க்கு புறப்படும் 56881 விழுப்புரம் பயணிகள் ரயில் ஆகியவை மார்ச் 1ம் தேதி முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "இத்தனை ஆண்டுகளாக இந்த பாதைகளில் டீசல் எஞ்சின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. வண்டிகள் தொலைதூரத்தில் வருவதை சத்தத்தின் மூலம் அறியமுடியும். தற்போது மின்சாரம் மூலம் இயக்கப்படுவதால் அதிக சத்தம் இல்லாமல் ரயில் வண்டிகள் வரும். எனவே பொதுமக்கள் ரயில் பாதையின் அருகே செல்லும்போது கவனமாக பார்த்து செல்லவேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.