Skip to main content

கவுன்சிலர்கள் ரகளையால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்ட உயர்நீதிமன்றம்

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

chennai high court

 

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில், ஆடுதுறை பேரூராட்சியில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

 

இந்த நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக்கோரி பேரூராட்சியின் எட்டு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், குதிரைப்பேரமும் கட்சித்தாவலும் நடக்க வாய்ப்பிருப்பதால் தாமதமின்றி போலீஸ் பாதுகாப்போடு தேர்தலை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாநிலத் தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Jyoti Nirmalasamy appointed as State Election Commissioner

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்த பழனிகுமார் கடந்த 9 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராகப் பணியாற்றி வந்த பா. ஜோதி நிர்மலாசாமியைத் தேர்வு செய்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காகத் தமிழக அரசு அனுப்பியிருந்தது.

இதற்கு ஆளுநர் உரிய ஒப்புதல் அளித்ததையடுத்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்துவது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணியாகும். 

Next Story

நாடாளுமன்ற தேர்தல்; தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Parliamentary elections; Tamil Nadu Chief Electoral Officer advice

 

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

 

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு  5 மாநில தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் ஏற்பாடுகள் தொடர்பாகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும் சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் அக்டோபர் 25 ஆம் தேதி தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து அக்டோபர் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும் 5 மாநில தேர்தலையொட்டி தமிழகத்தில் இருந்து 40 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.