Published on 18/06/2019 | Edited on 18/06/2019
ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதலமைச்சர் பழனிசாமி அங்கு நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘’ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது. இன்னும் 5 மாத காலத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். சுமார் 60 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது’’என்று தெரிவித்தார்.



