கடந்த மாதம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டு மாணவி சோபியா, உடன் பயணம் செய்த பா.ஜ.க. மாநில தலைவி தமிழசை சௌந்திர ராஜனைப் பார்த்து, பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்துக் கோஷமிட்டுக் கைதானார். விமான நிலையத்தில் போலீசாரால் எட்டு மணி நேர விசாரணைக் குடைச்சலுக்குள்ளானார். மாணவி மீது, தமிழிசை கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்ட போது அவருக்கெதிராக, அவர் தந்தை அந்தோணிசாமி கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை.
இது தொடர்பாக அந்தோணிசாமி மாநில மனித உரிமை கமிசனில் புகார் செய்திருந்தார் அந்தக் கமிசனின் உறுப்பினரும், நீதிபதியுமான ஜெயச்சந்திரன் இன்று நெல்லை சர்க்யூட் ஹவுசில் விசாரணை நடத்தினார். புதுக்கோட்டை இன்ஸ்டெக்டர் திருமலை, மாணவி சோபியா, அவர் தந்தை மூவரும் ஆஜரானார்கள்.
அப்போது, ‘’என் மகளின் படிப்பிற்கு தொந்தரவு செய்யக் கூடாது. அவரது வெளி நாட்டு படிப்பு தடையின்றி நடைபெறவேண்டும் அதற்கு இடையூறு தரக் கூடாது. அவரது பாஸ்போர்ட்டை முடக்கக் கூடாது. நாங்கள் தமிழிசையின் மீது கொடுத்த புகாரைப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார் சோபியாவின் தந்தை அந்தோணிசாமி.
அடுத்த கட்ட விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.